LIVE

சிதம்பரம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு 48 தினமாக நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தி அன்று சுமார் 135 கிராம் ( சுமார் 3.5 லக்ஷம் மதிப்பிலான ) தங்கத்தில் நடுவில் ஒற்றை மாணிக்க கல்லும், பதக்கத்தை சுற்றி வெள்ளைக் கற்கள் பதித்த சங்கிலியுடன் கூடிய ஜாங்கிரி பதக்கம் ஒன்றை (படம்) ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் நகரைச்சேர்ந்த திரு, ஸ்ரீதர் ,பத்மரஞ்சனி அவர்கள் கட்டளை தீக்ஷிதர் ரெ.ச.ராஜாமணி தீக்ஷிதர் மூலமாக பொது தீக்ஷிதர்கள் செகரெட்டரி ஐ.சர்வேஸ்வர தீக்ஷிதரிடம் வழங்கினார்கள் ரா.பாஸ்கர தீக்ஷிதர் உடனிருந்தார். ஸ்ரீ நடராஜருக்கு சாற்றப்பட்டது

 

குருப்பெயர்ச்சி பற்றிய ஒரு நேர்முகம்

பதில்கள்: பால ஜோதிடர் உ.வெங்கடேச தீக்ஷிதர் , M.A.,

குருப்பெயர்ச்சி ஏன் ஏற்படுகிறது? வரும் குருப்பெயர்ச்சியின் சிறப்பு என்ன?

ஆண்டிற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சி வருகிறது. சூரிய குடும்பத்தின் ( அளவில்) மிகப் பெரிய கிரகம் குரு . மஞ்சள் நிற வாயு நிறைந்து காணப்படுகிறது. அந்த கிரகம் மனிதனின் வயிறு சம்பந்தமான வியாதிகளை தீர்ப்பதாக ஜோதிட நூல்கள் கூறுகிறது. இந்த ஆண்டு கடகராசியிலிருந்து – சிம்ம இராசிக்குச் செல்வது தான் விசேஷம். இந்த ஆண்டின் கடைசியில் மஹாமகம் ( கும்பகோணத்தில் ) விமரிசையாக நடக்கும்.

 

குருப்பெயர்ச்சியினால் பாதிப்படையும் ராசிகள் எவை? என்ன பரிகாரம் ?

 ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துக் கொள்ளவேண்டும்.  வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உதவுவது, யாகங்களில் கலந்து கொள்வது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டால் குருவின் ( தீய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம் ) அருளால் நன்மை அடையலாம் . மீதமுள்ள ராசிக்காரர்களுக்கு ( மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்) என்ன பலன் ? பொதுவாக நன்மை தான் என்றாலும் அவர்களும் யாகத்தில் கலந்து கொண்டால் மேலும் நன்மை உண்டாகும்.

 

குருப்பெயர்ச்சி யாகத்தை திருநாரையூரில் செய்வதால் என்ன சிறப்பு?

 முதலில் குருப்பெயர்ச்சியும், சங்கடஹர சதுர்த்தியும் ஒன்றாக வருவது. அடுத்து சங்கடஹர சதுர்த்தியில் திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரை வணங்கினால் ஆண்-பெண் இருபாலாருக்கும் திருமணத்தடை, வியாபாரத்தில் நஷ்டம், எல்லோருக்கும் மனதில் உள்ள கவலைகள்,என்று நாம் விரும்பாத எதுவும் நம்மைத் தொடராது. அப்படி இந்த குருப்பெயர்ச்சியில் திருநாரையூரில் நடைபெறக்கூடிய “ குருப்பெயர்ச்சி மஹா யாகத்தில் “ கலந்து கொண்டு விநாயகரையும் தரிசித்து குருவின் அருளையும் பெறலாம். ( கேது தசை, கேது புத்தி, கேது அந்தரம், நடப்பவர்கள், கேதுவின் நக்ஷத்திரம் அசுவதி, மகம், மூலம் உள்ளவர்கள் அவசியம் ஒரு முறை  சங்கடஹர சதுர்த்தியில் திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரை வணங்கினால் போதும் உங்களுக்கு வாழ்வில் வசந்தம் வரும். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் , அறிந்தவர்கள் ஏராளம் உண்டு )  அது மட்டும் இன்றி பக்தர்களுக்கு தானத்தில் சிறந்த “அன்னதானம்”  ( ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இரண்டு சதுர்த்தியிலும் வரும் விநாயகர் சதுர்த்தி முதல் “அன்னதானம்”  நடைபெறும், 05-07-2015 அன்று பதினைந்தாவது (15) ஆண்டு தொடங்குகிறது ) செய்வதால் மேலும் பல நன்மைகளை அடையலாம்.  

                 வெளியூர்களில் வெளிநாடுகளில் இருப்பவர்களும் இந்த பிரம்மாண்டமான யாகத்தைக் கண்டுகளிக்கும் வண்ணம் இணையதளத்திலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் தகவலுக்கு www.annadhaanam.in  ,  chidambarampickup.com , 9894406321 என்ற உலா பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.  

( பிரமாண்டமான யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது )